2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 25 லட்சத்தை நெருங்குகிறது!

பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 24,42,375 ஆக அதிகரித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜூலை 2020, 6:08 am

DIN

பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 24,42,375 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 24 லட்சம் பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 24,42,375 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 87,618 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும், பிரேசிலின் முக்கிய நகரமான சா பவுலோவில் இதுவரை 4,87,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 21,676 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று ரியோ டி ஜெனிராவில் 1,57,834 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 12,876 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.