உலகப் பொருளாதாரத்துக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகம்

சீன அரசு ஜூன் 8ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், நடத்தியது. அண்மையில் வெளியிடப்பட்ட ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானத் திட்டம் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
உலகப் பொருளாதாரத்துக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகம்
Published on
Updated on
1 min read

சீன அரசு ஜூன் 8ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், நடத்தியது. அண்மையில் வெளியிடப்பட்ட ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானத் திட்டம் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.

கரோனா வைரஸின் பாதிப்பால், உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்தப் பின்னணியில், சீனா, திட்டத்துக்கிணங்க தொடர்ச்சியாக வெளிநாட்டுத் திறப்பை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்துக்கு உறுதியாக ஆதரவு அளித்து, பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றி வருகிறது. 

ஹாய்நான் மாநிலத்தில் தாராள வர்த்தகத் துறைமுகத்தை உருவாக்குவது என்பது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தனிப்பட்ட முறையில் திட்டமிட்ட முக்கிய நடவடிக்கையாகும். இந்தத் துறைமுகம், சீன சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை மேலும் புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும். இதன் மூலம், உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்பை நானவாக்க வேண்டும்  என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதலில், சர்வதேச உயர் நிலையிலான பொருளாதார மற்றும் வர்த்தக விதிமுறையை இந்த உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்பு எடுத்துக்காட்டுகிறது. 

அத்துடன், சீனத் தன்ச்சிறப்புடைய அமைப்பு முறையின் ஒருங்கிணைப்பு மற்றும் புத்தாக்கத்தையும் இந்த உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்பு எடுத்துக்காட்டுகிறது.

ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானம், சீனச் சந்தையின் ஈர்ப்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்தி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகளை விளைவித்து, உலகப் பொருளாதாரத்துக்கு மேலும் அதிகமான இயக்கு ஆற்றலை வழங்குவது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com