அபு தாபியில் கரோனா பாதித்த இந்திய ஆசிரியர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் பணியாற்றி வந்த இந்திய ஆசிரியர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார்.


துபை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் பணியாற்றி வந்த இந்திய ஆசிரியர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார்.
அனில் குமார் என்ற 50 வயது ஹிந்தி ஆசிரியர், அபு தாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் கரோனா பாதித்து ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அனில் குமாருக்கு கரோனா இருப்பது மே 7-ம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், 24ம் தேதி உயிரிழந்தார்.
இவர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அபு தாபியில் வசித்து வந்தார். அவரது மனைவியும் அதே பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அனில் குமார் மரணத்துக்கு அவர் பணியாற்றி வந்த பள்ளி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...