/

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை  12,11,421 ஆக உயர்வு 

உலகளவில் கரோனா தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12,11,421 ஆக உயர்ந்துள்ளது.  

News image

worldwide-corona

Updated On :3 நவம்பர் 2020, 6:14 am

உலகளவில் கரோனா தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12,11,421 ஆக உயர்ந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 4,73,26,715 ஆக அதிகரித்துள்ளது.  இவர்களில் 3,40,35,878 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 12,11,421 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,20,79,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 86,638 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 9,56,7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,36,997 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு பாதிப்பு 8,26,7,623 ஆகவும் 1,23,139 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் பிரேசிலும் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.