கரோனாவை கையாள்வதில் சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கரோனாவை கட்டுப்படுத்துவதில் 'அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமானவை' என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 
கரோனாவை கையாள்வதில் சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: உலகம் தற்போது தொற்றின் முக்கியமான கட்டத்தில் உள்ளதாவும், கரோனாவை கட்டுப்படுத்துவதில் சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், கரோனாவை கட்டுப்படுத்துவதில் 'அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமானவை' என்று எச்சரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,24,97,381 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,49,367 ஆக அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை வந்துள்ளன.

ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரோனா நோய்த்தொற்று பரவல் முக்கியமான கட்டத்தில் உள்ளது. தொற்று பரவலை கையாள்வதில் சில நாடுகள் ஆபத்தான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. இதனால் சுகாதார சேவைகள் பாதிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளதாகவும், அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். 

மேலும் தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதைத் தடுப்பதற்கு "உடனடியாக சரியான நடவடிக்கை" அவசியம் என உலகத் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

"பிப்ரவரியில் சொன்னது போல, இன்று அதை மீண்டும் சொல்கிறேன். இது ஒரு நிராகரிக்கக்கூடிய எச்சரிக்கை அல்ல." என்று டெட்ரோஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com