/

இந்தியாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கில், கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

News image

இந்தியாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை: உலக சுகாதார நிறுவனம்

Updated On :6 ஏப்ரல் 2021, 7:55 am

ANI


புது தில்லி: இந்தியாவில் ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கில், கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தங்களது சுட்டுரைப் பக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், ஏப்ரல் 15-ஆம் தேதி, இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருப்பதாக ஒரு விடியோ வெளியானது. ஆனால், அது வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அது போன்ற எந்த எச்சரிக்கையையும் இந்தியாவுக்கு பிறப்பிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, இந்தியாவில் 50 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாவார்கள் என்று வெளியான விடியோ ஒரு பொய்யானச் செய்தி. உலக சுகாதார நிறுவனம் அதுபோன்ற எந்த விடியோவையும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,26,86,049 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 446 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.