குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாதுகாப்பு கருதி பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம்: தலிபான்

பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று எங்களுடைய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்தார

News image
தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித்
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:56 am

DIN

பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று எங்களுடைய படைகளுக்கு பயிற்சி அளிக்கும்வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்தார்.

இதுகுறித்து தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியதாவது: 

எங்களுடைய படைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது, பெண்களுடன் எப்படிப் பேசுவது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே, பெண்கள் பாதுகாப்பு கருதி இந்த சூழ்நிலை மாறும்வரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இது  தற்காலிகமான நடைமுறையே. பெண்களின் பாதுகாப்பு  உறுதி செய்யப்பட்டவுடன் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

ஜபிபுல்லா முஜாஹித் இவ்வாறு தெரிவித்தபின்னரே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும், பெண்களுக்கு மதிப்பளிக்கிறோம் என்று உலகத்தை நம்ப வைப்பதற்காக தலிபான்கள் இவ்வாறு தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, முகத்தை மறைக்கும்படி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் கூறுவதுடன், திருமணம் செய்துகொள்ள பெண்கள், சிறுமிகளை கடத்துவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.