ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காபூல் விமான நிலையத்திற்கு மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல்: மக்கள் வெளியேற அமெரிக்கா வலியுறுத்தல்

காபூல் விமான நிலையத்தை சுற்றியுள்ள வாயில்களிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கா மக்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

News image

காபூல் விமான நிலையம்

Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:24 am

DIN

காபூல் விமான நிலையத்தை சுற்றியுள்ள வாயில்களிலிருந்து உடனடியாக வெளியேற அமெரிக்கா மக்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தலிபான்கள் ஆட்சியிலிருந்து தப்பிக்க காபூல் விமான நிலையத்தில் குவிந்திருந்த மக்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தை சுற்றியுள்ள வாயில்களிலிருந்து உடனடியாக  வெளியேறும்படி மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கர்கள் மற்றும் கூட்டு நாடுகளின் மக்கள் ஆபத்து நிறைந்த காபூல் விமான நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுவருவதாகவும் தற்போது மீண்டும் நம்பகத்தகுந்த வட்டாரங்களிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதாகவும் பென்டகன் முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தது.

காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட், உள்துறை அமைச்சகத்தின் புதிய கேட் அருகே உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், விமான நிலையத்திற்கோ அதை சுற்றியுள்ள வாயில்களுக்கோ வர வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.