விமானப் போக்குவரத்து தடையால் எந்தப் பயனும் இல்லை: ஐ.நா
விமானப் போக்குவரத்து தடையால் எந்தப் பயனும் இல்லை: ஐ.நா

விமானப் போக்குவரத்து தடையால் எந்தப் பயனும் இல்லை: ஐ.நா

ஒமைக்ரான் தொற்று காரணமாக பல நாடுகள் விமானப் போக்குவரத்தை தடை செய்யும் நிலையில் இருப்பதால் , அதனால் எந்தப் பயனும் இல்லை என ஐநா-வின் பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்திருக்கிறார்.
Published on

ஒமைக்ரான் தொற்று காரணமாக பல நாடுகள் விமானப் போக்குவரத்தை தடை செய்யும் நிலையில் இருப்பதால் , அதனால் எந்தப் பயனும் இல்லை என ஐநா-வின் பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்திருக்கிறார்.

புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்கா , ஜப்பான் , ஜெர்மனி , சௌதி , இத்தாலி உள்ளிட்ட 23 நாடுகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அந்நாடுகளுக்கு விமான சேவையை அளிக்க மற்ற நாடுகள் தயக்கம் காட்டி வருகிறது.

மேலும் சர்வதேச விமானப் போக்குவரத்தை தடை செய்யவும் சில நாடுகள் ஆலோசித்து வருகிற வேளையில் அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் விமானப் போக்குவரத்து தடை என்பது நியாயமற்றது எனவும் ஐநா பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com