வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அமெரிக்காவில் கரோனாவால் 8 லட்சம் பேர் பலி

அமெரிக்காவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 8 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

News image
அமெரிக்காவில் கரோனாவால் 8 லட்சம் பேர் பலி
Updated On :15 டிசம்பர் 2021, 5:51 am

DIN

அமெரிக்காவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 8 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

உலகளவில் கரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்காவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று(டிச-14) கரோனா தொற்றின் காரணமாக 2,054 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 8,00,343 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் உலகில் கரோனாவால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 5.01 கோடியாக பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று காரணமாக அமெரிக்காவில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.