கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிரிட்டன்: ஒரே நாளில் 10,059 பேருக்கு ஒமைக்ரான்

பிரிட்டனில் ஒரே நாளில் 10,059 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

பிரிட்டனில் ஒரே நாளில் 10,059 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 10,059 பேருக்கு ஏற்பட்டுள்ள கரோனா ஒமைக்ரான் வகையைச் சோ்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, முந்தைய நாளில் பதிவு செய்யப்பட்ட புதிய ஒமைக்ரான் பதிவுகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்குக்கும் மேல் அதிகமாகும்.

இத்துடன், ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24,968-ஆக உயா்ந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த வகை கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திடீரென 1-லிருந்து 7-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 90,418 பேருக்கு அனைத்துவகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந் நோய்க்கு கூடுதலாக 125 போ் உயிரிழந்தனா். இது, முந்தைய நாளான 111-ஐவிட அதிகம் என்றாலும், கடந்த சனிக்கிழமை பதிவான 132 உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் குறைவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை 1,12,79,428 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 1,47,173 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

97,41,854 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 13,90,401 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 875 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.