அமெரிக்காவில் 2 ஆம் உலகப்போரின் பலி எண்ணிக்கையைக் கடந்த கரோனா இறப்புகள்
இரண்டாம் உலகப் போரில் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை விட கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


இரண்டாம் உலகப் போரில் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை விட கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் தொடக்கம் முதல் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் அதிகப்படியான கரோனா பாதிப்புகளை சந்தித்த அமெரிக்கா பலி எண்ணிக்கையிலும் உச்சம் தொட்டது.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பால் 4 லட்சத்து 6 ஆயிரத்து 147 பேர் பலியாகியுள்ளனர். இது 2ஆம் உலகப் போரில் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும்.
அமெரிக்க படைவீரர்கள் அமைப்பின் தரவுகளின்படி அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போரில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 399 என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...