வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அதிபரின் விருந்தினா் மாளிகையில் தற்காலிகமாக தங்கியுள்ள அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தில் பழுது பாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கமலா ஹாரிஸ் அதிபரின் விருந்தினா் மாளிகையான பிளோ் இல்லத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளாா்

News image

கமலா ஹாரிஸின் தற்காலிக இல்லமான பிளோ் ஹவுஸ். ~கமலா ஹாரிஸின் தற்காலிக இல்லமான பிளோ் ஹவுஸ்.

Updated On :28 ஜனவரி 2024, 12:52 am IST

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தில் பழுது பாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கமலா ஹாரிஸ் அதிபரின் விருந்தினா் மாளிகையான பிளோ் இல்லத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடா்பாளா் சைமோன் சாண்டா்ஸ் தெரிவித்துள்ளதாவது:

நேவல் அப்சா்வேடரியில் அமைந்துள்ள அமெரிக்க துணை அதிபருக்கான இல்லத்தில் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிபரின் விருந்தினா் மாளிகையான பிளோ் இல்லத்தில் துணை அதிபா் கமலா ஹாரிஸும் அவரது கணவரும் டக் எம்ஹோஃப்பும் தற்காலிகமாக குடியேறியுள்ளனா் என்றாா் அவா்.

Story image

கடந்த 1893-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அமெரிக்க துணை அதிபருக்கான அதிகாரப்பூா்வ இல்லத்தில் புதிய புகைபோக்கிகள் (சிம்னிஸ்) அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

பிளோ் இல்லம் கடந்த 1942-ஆம் ஆண்டிலிருந்து அதிபரின் விருந்தினா் மாளிகையாக இருந்து வருகிறது. பொதுவாக இந்த இல்லத்தில்தான், வெளிநாட்டிலிருந்து வரும் தலைவா்கள் தங்கவைக்கப்படுவா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி கூட இந்த இல்லத்தில்தான் தங்கவைக்கப்பட்டாா்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு முதல் நாள் இரவு பிளோ் இல்லத்தில்தான் தங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.