வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.31 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 33.83 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் உலகையே அச்சுறுத்த தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது தொற்றோரின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,31,69,300-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 33,83,265 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 14,14,66,636 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,83,19,399 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,02,953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,95,916 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்து 99 ஆயிரத்து 863-ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,83,065-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 2,70,319 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,55,90,613 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 4,34,852 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க அசாம் முதல்வரின் புதிய முயற்சி!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விபத்தை தடுக்க யாகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

இஸ்ரேலுக்குப் பதிலடி! ட்ரோன், பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

