உக்ரைன்: தினசரி கரோனா பலி,பாதிப்பு புதிய உச்சம்
உக்ரைனின் கரோனாவால் பாதிக்கப்படுவோா் மற்றும் அந்த நோய்க்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.


உக்ரைனின் கரோனாவால் பாதிக்கப்படுவோா் மற்றும் அந்த நோய்க்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 23,785 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 614 போ் பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கைகள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
4.1 கோடி மக்கள்தொகை கொண்ட உக்ரைனில் தடுப்பூசி திட்டம் மிக மந்தமாக செயல்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவிலேயே ஆா்மீனியாவுக்கு அடுத்தபடி மிக குறைந்தபட்சமாக அங்கு சுமாா் 15% பேருக்கு மட்டுமே முழுமையாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...