கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை தலிபான் பிரிதிநிதி நேற்று சந்தித்து பேசினார்.
தலிபான் பிரதிநிதி ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை நேற்று (செவ்வாய்கிழமை) தோஹாவில் சந்தித்து பேசினார். இந்திய தூதரை சந்தித்து பேசிய ஷேர் முகமது 1970 மற்றும் 1980களில் இந்தியா ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர் ஆவார். ஆப்கானிஸ்தானை சமீபத்தில் கைப்பற்றிய தலிபான்கள் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இவரும் ஒருவர்.
தலிபான்களுடன் தூதரக உறவை பேணியுள்ளதாக இந்தியா முதல்முறையாக ஒப்புகொண்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான ஷேர் முகமதை கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேசினார். தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் தூதரகத்தை கத்தாருக்கு மாற்றிய ஜப்பான்
1979 முதல் 1982 வரை, மத்தியப் பிரதேசம் நோகானில் உள்ள ராணுவ கல்லூரியில் ராணுவ வீரராகவும் பின்னர், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் அலுவலராகவும் ஷேர் முகமது பயிற்சி பெற்றார். மற்ற தலிபான் தலைவர்கள் போல் அல்லாமல் ஆங்கிலத்தில் நல்ல பெற்ற இவர், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். முன்னதாக, தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவு அமைச்சராகவும் ஷேர் முகமது பொறுப்பு வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



