ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அமெரிக்காவில் பூஸ்டர் தவணை செலுத்தும் திட்டத்தில் சிக்கல்

அமெரிக்காவில் பூஸ்டர் தவணை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :4 செப்டம்பர் 2021, 12:20 pm

DIN

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பூஸ்டர் தவணை செலுத்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், மாடர்னா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர். 

கரோனாவுக்கு எதிராக கூடுதலான பாதுகாப்பை அளிக்கும் நோக்கில் பூஸ்டர் தவணை செலுத்த அமெரிக்கா தயாராகிவருவதாக பைடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இரண்டாவது தவணை செலுத்தி கொண்டு எட்டு மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தவணை செலுத்திக்கொள்ளலாம் என அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால், பூஸ்டர் தவணை குறித்த முக்கியமான தரவுகளை அளிக்காத காரணத்தால் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. எனவே, செப்டம்பர் 20ஆம் தேதி மாடர்னா தடுப்பூசியின் பூஸ்டர் தவணை பயன்பாட்டிற்கு வருவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன. 

இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவைக்கு மாடர்னா நிறுவனம் போதுமான தரவுகளை அளிக்கவில்லை" என்றார். 

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மாடர்னா நிறுவனத்திடம் கூடுதலான தரவுகளை கேட்டுள்ளது. இதன் காரணமாக, பூஸ்டர் தவணை செலுத்தும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.