கருங்கடலில் மூழ்கிய ரஷிய போர்க்கப்பல்

வெடிபொருள்களால் சேதமடைந்த ரஷியாவின் போர்க்கப்பல் மோஸ்க்வா, கருங்கடலில் மூழ்கியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருங்கடலில் மூழ்கிய ரஷிய போர்க்கப்பல்
கருங்கடலில் மூழ்கிய ரஷிய போர்க்கப்பல்
Updated on
1 min read

வெடிபொருள்களால் சேதமடைந்த ரஷியாவின் போர்க்கப்பல் மோஸ்க்வா, கருங்கடலில் மூழ்கியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் பாதுகாப்புப் படையில் முக்கிய அங்கம் வகித்து வந்த மோஸ்க்வா போர்க்கப்பல், கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள், வீரர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடுமையான சூறாவளிக் காற்றினால் சேதமடைந்து மூழ்கியிதாக ரஷிய பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய பாதுகாப்புத் துறையின் பலத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் மோஸ்க்வா கப்பல், உக்ரைன் மீதான படையெடுப்பில் கடற்படை தாக்குதலை தலைமைதாங்கி நடத்தி வந்தது.

அதேவேளையில், தங்களது ஏவுகணை போர்க்கப்பலை தாக்கியதாக கீவ்விலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து மாஸ்கோ தரப்பில் எந்த தகவலும் இல்லை. போர்க்கப்பலில் தீப்பிடித்ததால் மூழ்கியதாகக் கூறியுள்ளது.

போர்க்கப்பலில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களில் தீப்பிடித்ததால்தான் கப்பல் மூழ்கியதாக ரஷியா கூறியது. மேலும், தீப்பிடித்ததும் அதிலிருந்த 500க்கும் மேற்பட்ட கடற்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com