உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வியன்னா: மீண்டும் தொடங்கியது ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை

ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவாா்த்தை, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

Published On :

ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவாா்த்தை, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய அந்த நாடும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனியும் ஒப்புக் கொண்டு கடந்த 2015-இல் அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018-இல் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

அதையடுத்து முறியும் நிலையில் உள்ள அந்த ஒப்பந்தத்தை மீட்பதற்காக வியன்னாவில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.