உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க மாற்று ஏற்பாடு: வெளியுறவுத் துறை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க மாற்று ஏற்பாடு: வெளியுறவுத் துறை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியர்களை மீட்பதற்காக இன்று உக்ரைனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடு வானிலேயே தில்லி திரும்பியது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்பாடுகள் குறித்து உறுதியானதும் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் அங்குள்ள இந்தியர்கள் எங்கு சென்றாலும் பாஸ்போர்ட் மற்றும் இதர ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com