ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரிட்டன் முடிவு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது தலைநகர் கீவ் வரை வந்துள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்ததுடன் போரை நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன.
ஏற்கெனவே உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ரஷியா மீது அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ரஷிய அதிபர் புதின், உக்ரைன் நாட்டினரை அடிபணியச் செய்ய நினைக்கும் ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, ரஷியாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், அழிவின் பாதைக்கு புதின் சென்றுவிட்டதாகக் கூறியிருந்தார். மேலும், உக்ரைன் நிலவரம் குறித்து அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...