உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்தது ரஷியப் படை
உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷியப் படைகள் அந்நாட்டின் தலைநகர் கீவுக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷியப் படைகள் அந்நாட்டின் தலைநகர் கீவுக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இருநாட்டின் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டை எழுப்பியது.
இதையும் படிக்க | உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடத்தை தாக்கியது ரஷியா
இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைன் வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன் உக்ரைன் ராணுவ தளங்களையும் அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதுவரை தாக்குதல்களால் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களையும் 10க்கும் அதிகமான பொதுமக்களையும் உக்ரைன் இழந்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரான கீவுக்குள் ரஷியப் படைகள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...