பாதுகாப்பு உதவிகள்: பைடனுடன் உக்ரைன் அதிபர் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்பு உதவிகள் கேட்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்பு உதவிகள் கேட்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து, நிலம், வான், கடல் என அனைத்து வழியாகவும் அந்நாடு உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், முக்கிய நகரங்களில் குண்டு மழை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் கிவ்வை கைப்பற்றி அரசை கவிழ்ப்பதையே ரஷியா இலக்காக வைத்துள்ளது என அமெரிக்க மற்றும் உக்ரைன் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபரை தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையின் போது, உக்ரைனுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளும், போர் எதிர்ப்பிற்கான கூட்டணி குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார்.
இந்த தகவலை வெள்ளை மளிகையும் உறுதி செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...