யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிழக்கு நாடுகளின் பாதுகாப்பிற்கு படைகளை அனுப்பும் நேட்டோ

உக்ரைனை ரஷிய படைகள் ஆக்கிரமித்து வரும் நிலையில், கூட்டணியில் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை அனுப்பவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 பிப்ரவரி 2022, 6:39 pm

DIN

உக்ரைனை ரஷிய படைகள் ஆக்கிரமித்து வரும் நிலையில், கூட்டணியில் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை அனுப்பவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.

ரஷியாவின் முப்படைகளும் இரண்டாவது நாளாக உக்ரைன் நாட்டை தாக்கி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியப் படைகள் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பிறகு நேட்டோ தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷியாவின் தாக்குதலை கண்டிக்கின்றோம். உடனடியாக தாக்குதலை நிறுத்திவிட்டு ஆக்கிரமிப்புகளிலிருந்து ரஷிய ராணுவத்தினர் வெளியேற வேண்டும்.

உக்ரைன் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவோம். மற்றவர்களை உதவ அழைப்போம். 

நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பை கருதி கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு கூடுதல் தற்காப்புப் படைகளை அனுப்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.