/

இரட்டிப்பானது சா்வதேச தினசரி கரோனா பாதிப்பு

சா்வதேச அளவில் தினசரி கரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:20 pm

DIN

சா்வதேச அளவில் தினசரி கரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் புள்ளிவிவரங்களின்படி, தினசரி கரோனா பாதிப்பு கடந்த மாதம் 23 முதல் 29-ஆம் தேதி வரையிலான வாரத்தில் 10 லட்சத்தைக் கடந்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக 21.06 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டதற்குப் பிறகு, உலகில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 270 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.