மெக்ஸிகோ: 3 லட்சத்தைதாண்டிய கரோனா பலி
மெக்ஸிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.


மெக்ஸிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மெக்ஸிகோவில் கரோனா பாதிப்பால் 168 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 3,00,101-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, புதிதாக 28,023 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,83,118-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷியா, மெக்ஸிகோவுக்கு அடுத்த படியாக, கரோனா பலி எண்ணிக்கையில் 3 லட்சத்தைத் தாண்டிய 5-ஆவது நாடாக மெக்ஸிகோ ஆகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...