ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை

ஒரே வாரத்தில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜனவரி 2022, 11:15 am

DIN

ஒரே வாரத்தில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் அதிநவீன பாலிஸ்டிக் வகை ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது.

இந்நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. கிழக்கு கடற்கரைப் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது. 

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, பிரிட்டன்  மற்றும் அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் ஏவுகணை சோதனையைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஒரேவாரத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனை அப்பிராந்தியத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இருப்பினும் ஏவுகணை சோதனை குறித்து எந்தவிவரங்களையும் இதுவரை வடகொரியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.