ஆசிரியருக்கு 101 முறை கத்திக் குத்து...30 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த முன்னாள் மாணவர்

1990களில் பள்ளியில் படித்தபோது, தன்னை குறித்து ஆசிரியர் மரியா வெர்லிண்டன் தெரிவித்த கருத்திலிருந்து மீளமுடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பெல்ஜியமில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் ஒருவர் பழி தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப பள்ளி படித்தபோது, ஆசிரியர் அவமானப்படுத்தியதால் 2020ஆம் ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் ஒப்பு கொண்டுள்ளார்.

1990களில் பள்ளியில் படித்தபோது, தன்னை குறித்து ஆசிரியர் மரியா வெர்லிண்டன் தெரிவித்த கருத்திலிருந்து மீளமுடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டவரான குண்டர் உவென்ட்ஸ் விசாரணை அலுவலர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, 59 வயதான மரியா வெர்லிண்டன் ஆண்ட்வெர்பில் உள்ள அவரது வீட்டில் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறை பல கட்டமாக விசாரணை மேற்கொண்ட நிலையிலும் கொலையை யார் செய்தது என்பதற்கு விடை கிடைக்காமலேயே இருந்துவந்தது. நூற்றுக்கணக்கான டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்த பிறகும் கொலைகாரர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை. 

பின்னர், சாட்சியாளர்கள் சாட்சி சொல்ல வர வேண்டும் என வெர்லிண்டனின் கணவர் பொதுவெளியில் கோரிக்கை விடுத்திருந்தார். கிட்டத்தட்ட 101 முறை கத்தியால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டிருந்தாக செய்தி வெளியாகியிருந்தது. சம்பவ இடத்தில் சமையலறையில் கிடந்த அவரது உடல் அருகே இருந்த பணப்பையிலிருந்து பணம் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து, பணம் திருடுவதற்காக அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. 

கடந்த 2020ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி, கொலை சம்பவம் நடைபெற்று 16 மாதங்கள் கழித்து கொலை செய்ததாக உவென்ட்ஸ் என்பவர் தனது நண்பரிடம் ஒப்பு கொண்டார். இதுகுறித்து காவல்துறையினரிடம் அவர் தகவல் தெரிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று உவென்ட்ஸ் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com