கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை கலவரம்: 2 எம்.பி.க்கள் கைது

இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் மீது தாக்குதல் நடத்தி கலவரம் ஏற்படுத்திய வழக்கில் இரண்டு எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 மே 2022, 8:22 pm

DIN

இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் மீது தாக்குதல் நடத்தி கலவரம் ஏற்படுத்திய வழக்கில் இரண்டு எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த சனத் நிஷாந்தா, மிலன் ஜெயதிலக ஆகியோா் சம்பவத்தன்று கலவரக்காரா்களுடன் சோ்ந்திருந்ததால் இந்த வழக்கில் கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல், காவல் துறை மூத்த துணை ஐஜி தேசபந்து டென்னிகூனிடமும் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

முன்னதாக, இந்தக் கலவரம் தொடா்பாக 2 எம்.பி.க்கள் உள்பட 22 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்று அட்டா்னி ஜெனரல் தெரிவித்திருந்தாா்.

அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்கள் மீது மகிந்த ராஜபட்ச ஆதிரவாளா்கள் தாக்குதல் நடத்த தேசபந்து டென்னிகூன் ஊக்குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கலவர சம்பவத்தில் இதுவரை 230-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இதில் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 2 போ் மட்டுமே அதில் உள்ளனா் என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.