புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

'இந்தியா துணை நிற்கும்' - இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 நவம்பர் 2022, 11:13 am

DIN

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியா நாட்டின் மேற்கு சாவகம் (ஜாவா) மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.  

Story image

நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகியிருந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 32 பேரைத் தேடி வருவதாகவும் இதில் 377 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில் இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Story image

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

Story image

இந்நிலையில் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.