தைவானை சுற்றிவளைத்து சீனா போர் ஒத்திகை

தைவானை சுற்றியும் சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தைவானை சுற்றியும் சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

சீனாவுடன் தைவான் தீவை இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் தெரிவித்தது.

எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி தைவான் தீவிற்கு நான்சி பயணித்ததை தொடர்ந்து, ஏற்கெனவே கூறியதை போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுதந்திரம் கோரும் தைவான் மற்றும் அமெரிக்காவை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் கடல் மற்றும் நீர் பகுதியில் இன்றுமுதல் ஆகஸ்ட் 7 வரை போர் ஒத்திகை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

தைவான் தீவை சுற்றியும் சீனாவின் முப்படைகளும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com