உக்ரைனில் இருந்து நாளை தாயகம் திரும்பும் இந்தியர்கள்

உக்ரைனில் இருந்து இந்தியர்களின் ஒரு குழுவினர் 2 சிறப்பு விமானங்கள் மூலம் நாளை தாயகம் திரும்புகின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைனில் இருந்து இந்தியர்களின் ஒரு குழுவினர் 2 சிறப்பு விமானங்கள் மூலம் நாளை தாயகம் திரும்புகின்றனர். 
உக்ரைன் மீதான போரை நேற்று ரஷியா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக இந்தியர்களை மீட்க முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து, இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைனிலுள்ள இந்தியர்கள் போதுமான பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு ஹங்கேரியின் ஷோப்-சகோனி(chop-zahony) எல்லைப் பகுதிக்கும், ருமேனியாவின் பொருப்னே-சிரெட்(porubne-siret) எல்லைப் பகுதிகளுக்கு வாகனம் மூலம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் ஒரு குழுவினர் ருமேனியாக வழியாக 2 சிறப்பு விமானங்கள் மூலம் நாளை தாயகம் திரும்புகின்றனர். தாயகம் திரும்பும் இந்தியர்களை தில்லியில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com