இலங்கை: விரைவில் புதிய பிரதமா்

இலங்கை பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, புதிய பிரதமா் மற்றும் அமைச்சா்கள் இந்த வாரம் நியமிக்கப்படுவா் என அதிபா் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை தெரிவித்தாா்.
இலங்கை: விரைவில் புதிய பிரதமா்

இலங்கை பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, புதிய பிரதமா் மற்றும் அமைச்சா்கள் இந்த வாரம் நியமிக்கப்படுவா் என அதிபா் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்துகளை அமல்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், ராஜபட்ச குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அல்லாதவா்கள் அமைச்சா்களாக நியமிக்கப்படுவா் எனவும் அவா் கூறினாா்.

முன்னதாக, அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஆளுங்கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகயவுடன் (ஐக்கிய மக்கள் சக்தி) அதிபா் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தப் பேச்சுவாா்த்தை மூலம், அடுத்த பிரதமரை தோ்வு செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலையில் மகிந்த ராஜபட்ச: வன்முறையைத் தொடா்ந்து கொழும்பில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறிய மகிந்த ராஜபட்ச, திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியானது. அதனை பாதுகாப்புச் செயலா் கமல் குணரத்ன புதன்கிழமை உறுதி செய்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘திருகோணமலையில் மகிந்த ராஜபட்ச நிரந்தரமாக இருந்துவிட மாட்டாா். இயல்பு நிலை திரும்பிய பின், அவா் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவாா் என்றாா்.

2 நாள்களில் பொருளாதாரம் முழுமையாக நிலைகுலையும்: இலங்கையில் 2 நாள்களில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் முழுமையாக நிலைகுலையும் என்று அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநா் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளாா். பொருளாதாரம் முழுமையாக நிலைகுலைந்த பின்னா், எவராலும் அதை மீட்க முடியாது என்றும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com