அமெரிக்க அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் ஜோ பைடன்!

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்துக்கு நிதி திரட்டும் நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார் ஜோ பைடன்.
ஜோ பைடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயருடன் | AP
ஜோ பைடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயருடன் | AP
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நிலையில் தனது பதவிக்காலத்தை நீட்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஜோ பைடன்.

அதிக செலவு ஏற்படக் கூடிய இந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு நிதி திரட்டும் நிகழ்வுகளில் ஹாலிவுட் துறையினர் உடன் இணைந்து பங்கேற்று வருகிறார். நடுவில் ஹாலிவுட் துறையில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தால் நிகழ்வுகள் நடைபெறாத நிலையில் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

தெற்கு கலிப்போர்னியாவில் ஆரம்பித்துள்ள ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இந்த வார இறுதியில் மட்டும் ஆறு வெவ்வேறு நிகழ்வுகளிலும் சந்திப்புகளிலும் பங்கேற்கிறார்கள்.

இவற்றில் சில நிகழ்வுகள், பொதுவாகவும் தனியாகவும் நடைபெறவுள்ளன. 2023, ஏப்ரலில் நிதி திரட்டும் தொடர் நிகழ்வுகளைத் தொடங்கிய பைடன் எப்போதையும்விட அதிகமாக இந்த வார இறுதியில் திரட்டுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாண்டா மோனிகாவில் நடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்வில் பாடகர் லென்னி க்ராவிட்ஸ் இசை நிகழ்வு நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாகத்  தனது ஆதரவாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் ஜோ பைடன் உரையாற்றினார்.

இந்த வருடத்தின் இறுதி காலிறுதியில் 67 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டுவதை இலக்காகக் கொண்டு ஜோ பைடன் பயணித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கிற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடவுள்ள நிலையில், ஜோ பைடன் தனது ஜனநாயக கட்சியினரிடமும் அமெரிக்க மக்களிடமும் அபிமானத்தைப் பெறவேண்டி பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com