சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்டதில் 515 பேர் படுகாயமடைந்துள்ளனர். 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த விபத்துக்கு, கடுமையான பனியினால் ரயில் தடங்கள் வழுக்குவதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழுக்கும் தடங்களால் முன்னால் சென்ற ரயிலின் தானியங்கி பிரேக் தூண்டப்பட்டுள்ளது. இதனால் பின்னால் வந்த ரயிலும் வழுக்கும் தடங்களில் நிற்க முடியாமல் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன் கிழமையிலிருந்து பெய்யும் கடுமையான பனியால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடுமையான பனியால் சீனாவில் -7 டிகிரி செல்சியல் அளவில் வெப்பநிலை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா? அபிஜீத் தீப்கே

விரைவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



