சிரியா: இடிபாடுகளில் 90 மணி நேரம்.. பச்சிளம் குழந்தை, தாய் உயிருடன் மீட்பு!

சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் பச்சிளம் குழந்தையுடன் சிக்கித் தவித்த தாய், 90 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சிரியா: இடிபாடுகளில் 90 மணி நேரம்.. பச்சிளம் குழந்தை, தாய் உயிருடன் மீட்பு!

சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் பச்சிளம் குழந்தையுடன் சிக்கித் தவித்த தாய், 90 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில், துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐக் கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிரியா, துருக்கிக்கு உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன. 

இந்நிலையில், தெற்கு சிரியாவிலுள்ள ஹேட்டே பகுதியிலிருந்த இடிபாடுகளிலிருந்து பிறந்து 10 நாள்களே ஆன குழந்தையையும் தாயையும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர். 

யாகிஸ் உலாஸ் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு முதலுதவி மையத்துக்கு அழைத்துச்சென்றனர். குழந்தை கண்களைத் திறந்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், மயங்கிய நிலையிலிருந்த தாயையும் மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com