பிலிப்பின்ஸ் நாட்டில் நடுக்கடலில் படகு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சிக்விஜோர் மாகாணத்திலிருந்து போஹோல் மாகாணத்திற்கு சென்ற படகில் 120 பயணிகளும், படகுக் குழுவினரும் பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின்போது திடீரென நடுக்கடலில் படகில் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து, தீயினை அணைக்கும் பணியில் இரண்டு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். படகில் தீப்பிடித்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடலோர காவல் படை தரப்பில் கூறியதாவது: நடுக்கடலில் படகில் தீடிரென இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் மீட்கப்பட்டவர்கள் போஹோல் மாகாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்றனர்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 250 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமாகி 8 ஆண்டுகள்... ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறிய ஆல்யா - சஞ்சீவ்!

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!

விஜய்யைத் தாக்கியிருந்தால்... எச்சரிக்கும் ரசிகர்கள்!

பாஜகவுடன் ஸ்டாலின், காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு: மமதாவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


