அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை

ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ், அவரது குடியிருப்பில் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டார்.

News image

'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை

Updated On :4 மார்ச் 2023, 5:44 pm IST

மாஸ்கோ: ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ், அவரது குடியிருப்பில் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டார்.

அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பெல்ட்டால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதாகும் போடிகோவ், கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் சூழலியல் மற்றும் கணிதவியல் துறையின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வியாழக்கிழமை அவரது உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது.

கரோனா பேரிடர் காலத்தில் 2020ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டுக்காக ஸ்புட்னிக் வி என்ற கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த 18 விஞஞானிகளில் போடிகோவும் ஒருவர்.

முதற்கட்ட விசாரணையில், 29 வயது இளைஞர், போடிகோவுடன் நடந்த வாக்குவாதத்தின் போது ஒரு பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், அவர் மீது மிக மோசமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.