மகனுக்கு 'சந்திரசேகர்' எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்!

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தன் மகனுக்கு சந்திரசேகர் எனப் பெயர் சூட்டியுள்ளார். 
மகனுக்கு 'சந்திரசேகர்' எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்!

உலகப்புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தன் மகனுக்கு சந்திரசேகர் என இந்தியப் பெயரைச் சூட்டியுள்ளார். 

லண்டனில் சர்வதேச அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் கூட்டத்தில் அனைத்து நாட்டின் அறிவியல் நிபுனர்களும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தனியார் நிறுவனங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அதில் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.  அங்கு எலான் மஸ்க்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் பேசிக்கொண்டபோது தன் மகனது பெயரும் சந்திரசேகர் என எலான் மஸ்க் தெரிவித்ததாக அமைச்சர் தனது எக்ஸ்(X) பக்கத்தில் கூறியுள்ளார்.

1987ல் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் நினைவாக எலான் மஸ்க் தன் மகனுக்கு இப்பெயரைச் சூட்டியிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். மேலும், அவரின் பதிவில் பின்னூட்டம் செய்திருந்த அக்குழந்தையின் தாய் ஷிவோன் சில்லிஸ், "உண்மைதான் நாங்கள் குழந்தையை செல்லமாக சேகர் என்றே அழைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். ஷிவோன் சில்லிஸ், எலான் மஸ்க்கின் நியூரா லின்க் (Neuralink) நிறுவனத்தின் இயக்குனராவார். 

எலான் மஸ்க்கும், ஷிவோன் சில்லிஸும் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு ஸ்டிரைடர் சந்திரசேகர் என்ற பெயரையும் பெண் குழந்தைக்கு அசூர் (Azure)  என்றும் பெயர் சூட்டியுள்ளனர். குழந்தைகளின் தாய் ஷிவோன் சில்லிஸின் தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com