அமெரிக்காவின் பிரபலமான ‘குட் மார்னிங் அமெரிக்கா’ தொலைக்காட்சித் தொடரை தொகுத்து வழங்குபவர்களில் பிரபலமானவர் ராபின் ராபர்ட்ஸ்(62). இந்த நிகழ்ச்சியின் பிரதான தொகுப்பாளினியான இவர் கடந்த செப்.8 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். அதில் என்ன சுவாரஸ்யம்? என நினைக்க வேண்டாம். அவர் மணம் புரிந்துகொண்டவரும் பெண்தான்!
ராபின் ராபர்ட்ஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு முகநூல் வாயிலாக தன் பாலின விருப்பத்தைக் கூறி பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட பெண் தொழிலதிபரான ஆம்பர் லைன்(49), ராபினைச் சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான புரிதலால் தங்கள் உறவை வளர்த்துள்ளனர். தோழிகளாக இருந்தவர்கள் ஒருகட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் நல்ல துணையாகவும் மாறியிருக்கின்றனர்.
குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு ராபின் ராபர்ட்ஸ் அரிய வகை ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை நோயினால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு நம்பிக்கையான துணையாக இருந்துள்ளார் ஆம்பர். இந்த நிகழ்வே இருவருக்கும் இடையேயான உறவை மேலும் வலுவாக்கியிருக்கிறது.
இதையும் படிக்க: பலமுறை பாலியல் தொல்லை.. இசைநிகழ்ச்சியால் குவியும் புகார்கள்!
தொடர்ந்து, ஆம்பர் லைன் 2021-ல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூடவே இருந்து தேற்றியுள்ளார் ராபின். இதுபோல் பல நிகழ்வுகளில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உற்ற தோழிகளாகவும் இணையாகவும் இருந்திருக்கின்றனர்.
இந்நிலையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக உறவிலிருந்த இவர்கள் கடந்த செப்.8 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபாரிங்டன்னில் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளனர்.
இதையும் படிக்க: அழகியும் அழகியும் ரகசிய திருமணம், குவியும் வாழ்த்துகள்
இதை, தன் இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்திருக்கிறார் ராபின் ராபர்ட்ஸ். மேலும், தன் பதிவில், “எங்கள் கொல்லைப்புறத்தில் வரவேற்பு நிகழ்வுக்குப் பின் மாயாஜாலமான திருமணம் நடைபெற்றது. இதை சாத்தியப்படுத்த உடனிருந்தவர்களை எப்போதும் நினைத்துப்பார்ப்போம். தேனிலவே இதோ வருகிறோம்” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

