இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இணையவழித் தாக்குதல்: ஈரான் பெட்ரோல் நிலையங்கள் முடக்கம்

இணையவழித் தாக்குதல் காரணமாக ஈரானிலுள்ள பெட்ரோல்-டீசல் நிரப்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாக அந்த நாட்டு தொலைக்காட்சி திங்கள்கிழமை கூறியது.

News image
Updated On :18 டிசம்பர் 2023, 8:52 pm

DIN

இணையவழித் தாக்குதல் காரணமாக ஈரானிலுள்ள பெட்ரோல்-டீசல் நிரப்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாக அந்த நாட்டு தொலைக்காட்சி திங்கள்கிழமை கூறியது.

இது குறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியதாவது:

நாட்டின் 70 சதவீத பெட்ரோல் நிலையங்களின் செயல்பாடுகள் திங்கள்கிழமை முடங்கின. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டது.

இணையவழியில் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். எனவே, பொதுமக்கள் பீதியடைந்து பெட்ரோல் நிலையங்களில் குவியவேண்டாம் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த இணையவழித் தாக்குதலுக்கு ‘கொஞ்ஜெஸ்கே தராண்டே’ என்ற ஊடுருவல் குழு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே போன்று ஏற்கெனவே நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.