எக்ஸ்(ட்விட்டர்) வலைதளம் இன்று காலை முடங்கியதால் இணையப் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கான மக்கள் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை வாங்கிய எலான் மாஸ்க், எக்ஸ் எனப் பெயரை மாற்றினார்.
இந்த நிலையில், எக்ஸ் தளமானது இன்று காலை 11 மணிமுதல் முடங்கியுள்ளது. பயனர்களின் முகப்புப் படத்தை தவிர பதிவுகள் உள்ளிட்ட வேறு எதுவும் தெரியவில்லை.
ஆனால், பயனர்களால் பதிவை வெளியிட முடிகிறது. அதேபோல், ஸ்பேஸ் தளமும் நன்றாக செயல்பட்டு வருகின்றது. பலர் தங்களின் ஸ்பேஸில் எக்ஸ் தளம் முடங்கியது குறித்து விவாதித்து வருகின்றனர்.
எக்ஸ் முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தளத்தை மீட்கும் பணியில் எக்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்பக் குழு ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.