
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உலகம் முழுவதும் டிச. 5 திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
வட அமெரிக்காவில் தற்போது திரையிடப்பட்டிருக்கும் மோனா 2, விக்டு, கிளேடியேட்டர் 2 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக புஷ்பா 2 நான்காமிடத்தில் உள்ளது. வட அமெரிக்காவில் புஷ்பா 2 வெளியிடப்பட்டுள்ள 1245 திரையரங்குகளில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இருநாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக 17 லட்சம் டாலர் வசூலித்துள்ளது.
கிறிஸ்டோபர் நோலனின் ‘இண்டெர்ஸ்டெல்லார்’ பாக்ஸ் ஆஃபிஸில் 5-ஆவது இடத்தில் உள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் ‘இண்டெர்ஸ்டெல்லார்’ மறுவெளியீடாக ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகி 13.70 லட்சம் டாலர் வசூலித்துள்ளது.
‘இண்டெர்ஸ்டெல்லார்’ திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், புஷ்பா 2 பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அல்லு அர்ஜுன் - பகத் ஃபாசில் கூட்டணியை திரையில் கண்டுகளிக்க உலகம் ழுழுவதும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு வருகை தருவதை பார்க்க முடிகிறது.
இதனிடையே, புஷ்பா 2 திரைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்தியாவில் ஐமேக்ஸ் திரைகளில் மறுவெளியீடாக வெளியாகவிருந்த இண்டெர்ஸ்டெல்லார் வெளியிடப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் புஷ்பா - 2 வசூல்!
புஷ்பா-2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.294 கோடி என படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் ழுழுவதும் படம் வெளியான முதல் இரண்டு நாள்களில் மட்டும் ரூ. 449 கோடி வசூலித்துள்ளதாகவும், 3 நாள் வசூல் ரூ. 621 கோடி எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புஷ்பா-2 திரைப்படத்தை கண் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோரும் திரையரங்குகளில் கண்டுகளிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.