இந்திய பிரதமர் குறித்தும் இந்திய மக்கள் குறித்தும் மாலத்தீவு இணை அமைச்சர்கள் வெளிப்படுத்திய கருத்தை முன்னிட்டு இந்தியா- மாலத்தீவு இடையேயான ராஜ்ய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்பொருட்டு முதன்மை பயண ஏற்பாட்டு நிறுவனமான ஈஸ்மைடிரிப் மாலத்தீவுக்கான தனது பயணச்சேவைகளை ரத்து செய்தது.
இந்த நிலையில், மாலத்தீவின் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பட்டாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அந்த நிறுவனத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்களின் ஆத்மார்த்தமான மன்னிப்பை வெளிபடுத்தியுள்ள கூட்டமைப்பு இதனால் மாலத்தீவு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளது.
மாலத்தீவின் உள்நாட்டு உற்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுலா மூலமாக ஈட்டக்கூடிய வருவாய்தான். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதாகவும் கரோனா பேரிடரின்போது கூட சுற்றலாவை அனுமதித்த நாடாக மாலத்தீவு இருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிக்க: வலைதளத்தில் மாலத்தீவை நீக்கு! கோபத்தில் இந்திய பயனாளர்கள்!
44 ஆயிரத்துக்கும் மக்கள் இந்தத் துறையை நம்பியிருப்பதாகக் குறிப்பிடும் கூட்டமைப்பு, இந்தியர்களை நாங்கள் வாடிக்கையாளர்களாக பார்க்கவில்லை, சகோதரர்களாக பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

