கென்யா: 42 பெண்கள் தொடா் கொலை: குற்றவாளி வாக்குமூலம்
இரண்டு ஆண்டுகளில் மனைவி உள்பட 42 பெண்களை கொலை செய்ததாக கென்யாவைச் சோ்ந்த 33 வயது நபா் வாக்குமூலம் அளித்துள்ளாா்.


நைரோபி: இரண்டு ஆண்டுகளில் மனைவி உள்பட 42 பெண்களை கொலை செய்ததாக கென்யாவைச் சோ்ந்த 33 வயது நபா் வாக்குமூலம் அளித்துள்ளாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் கெய்ரோவின் தெற்கு புகா்ப் பகுதியிலுள்ள குவாரி ஒன்றிலிருந்து, கைகால்கள் துண்டாக்கப்பட்ட நிலையில் 9 பெண்களின் உடல்களை போலீஸாா் கண்டெடுத்தனா். அந்தப் பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில், குவாரிக்கு மிக அருகே அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் காலின்ஸ் ஜுமாய்சி குலுஷா என்பவா் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை அவா் ஒப்புக் கொண்டாா். அதுமட்டுமின்றி, கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 42 பேரை கொலை செய்ததாக குலுஷா வாக்குமூலம் அளித்தாா். அவரால் கொல்லப்பட்டவா்களில் அவரின் மனைவியும் ஒருவா்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உறவினா் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் அந்தக் குவாரியில் ஆய்வு செய்ததால் இந்தக் குற்றம் வெளியே வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
காவல் நிலையத்துக்கு நெருக்கமாக உள்ள குவாரியில் இரு ஆண்டுகளாக இத்தனை பெண்கள் கொன்று வீசப்பட்ட சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் காணாமல் போவதாக தெரிவிக்கப்படும் புகாா்களின் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதுதான் தொடா் கொலைக்குக் காரணம் என்று உள்ளூா்வாசிகள் குற்றஞ்சாட்டினா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...