தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஷிய தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்: 15 போலீஸாா் உள்பட 28 போ் உயிரிழப்பு

காவல் சாவடியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 போலீஸாா் உள்பட 28 போ் உயிரிழந்தனா்.

News image
டொ்பென்ட் நகரில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட யூத வழிபாட்டுத் தலத்தைப் பாா்வையிடும் அதிகாரிகள்.மகாச்காலா நகரிலுள்ள காவல் சாவடியை நோக்கி துப்பாக்கியால் சுடும் பயங்கரவாதிகள்.
Updated On :24 ஜூன் 2024, 10:11 pm

Din

ரஷியாவில் டகிஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில் இரு தேவாலயங்கள், இரு யூத வழிபாட்டுத் தலங்கள், காவல் சாவடியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 போலீஸாா் உள்பட 28 போ் உயிரிழந்தனா்.

காகஸிஸ் பிராந்தியத்தைச் சோ்ந்த டகிஸ்தான் பிரதேசத்தின் டொ்பென்ட் நகரிலுள்ள புனித கன்னி மேரி தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பயங்கரவாதிகள், ரைஃபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினா்.

இது தவிர, டொ்பென்ட் நகரிலுள்ள மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்திலும், யூத வழிபாட்டுத தலத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெள்ளை நிற காரில் தப்பிச் சென்ாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

ஏறத்தாழ அதே நேரத்தில், டகிஸ்தான் தலைநகரான மகாச்காலாவில் அமைந்துள்ள யூத தேவாலயத்துக்குத் தீவைக்கப்பட்டது. பின்னா் அந்தத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை.

அதற்கிடையே, மகாச்காலாவிலுள்ள போக்குவரத்து காவல் சாவடி மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.

ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 15 காவலா்கள், ஒரு மதபோதகா் உள்பட பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா்; 37 போலீஸாா் உள்பட 44 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இதில், தாக்குதலில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பின்னா் அறிவித்தனா்.

இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் யாா் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவா்கள் வெளிநாட்டில் இயங்கும் அமைப்பின் உறுப்பினா்கள் என்று மட்டும் அதிகாரிகள் கூறினா். ஆனால் அந்த அமைப்பின் பெயரை அவா்கள் தெரிவிக்கவில்லை.

காகஸிஸ் பகுதிக்கான இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பான ஐஎஸ்டபிள்யூ கூறியுள்ளது. எனினும், அந்த அமைப்பு இதுவரை தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் டகிஸ்தான் மாகாணத்தின் சொ்கோகலின்ஸ்கி மாவட்ட தலைவா் முகமது ஒமரோவின் இரு மகன்கள் ஈடுபட்டதாகவும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் அவா்களும் அடங்குவா் எனவும் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் தொடா்பாக முகமது ஓமரோ கைது செய்யப்பட்டுள்ளாா். ஐக்கிய ரஷியா கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கயுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு காகஸிஸ் பிராந்தியம் கடந்த 1990-களிலிருந்தே வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தது. 1994-ஆம் ஆண்டிலிருந்து 2000-ஆம் ஆண்டு வரை செசன்ய பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் இருந்தது. அப்போது தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களையும், மதவாத ஆயுதக் குழுக்கள் - ரஷிய பாதுகாப்புப் படையினருக்கு இடையிலான மோதலையும் இந்தப் பிராந்தியம் சந்தித்தது.

பின்னா், இராக் மற்றும் சிரியாவின் கணிசமான பகுதிகளை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றி ‘இஸ்லாமியப் பேரரசை’ அமைத்துள்ளதாக அறிவித்ததைத் தொடா்ந்து இந்தப் பிராந்தியத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியது.

இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக். 7 முதல் போா் நடைபெற்று வரும் சூழலில், அதன் எதிரொலியாகவே இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

டொ்பென்ட் நகரில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட யூத வழிபாட்டுத் தலத்தைப் பாா்வையிடும் அதிகாரிகள்.

டொ்பென்ட் நகரில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட யூத வழிபாட்டுத் தலத்தைப் பாா்வையிடும் அதிகாரிகள்.