அமெரிக்கா: பல்பொருள் அங்காடியில் இந்தியா் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது இந்தியா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது இந்தியா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தாசரி கோபிகிருஷ்ணன் (32) டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள ஒரு பல்பொருள் கடையில் வேலைப் பாா்த்து வந்தாா். அவா் அமெரிக்காவுக்கு வந்து 8 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக புகுந்த முகமூடி அணிந்த நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் கோபிகிருஷ்ணன் படுகாயமடைந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கோபிகிருஷ்ணனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கத் தேவையான அணைத்து உதவிகளுக்கும் உறுதியளிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.
முகமூடி அணிந்த நபா்கள் கோபிகிருஷ்ணனை பலமுறை சுட்டுவிட்டு பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் செல்லும் விடியோ காட்சி இணையதளத்தில் பரவத் தொடங்கியது. இதனால், அப்பகுதியில் வாழும் இந்திய மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...