ஈராக்கின் மீது துருக்கி தாக்குதல்: இருவர் பலி!
துருக்கிய விமானப் படையின் குண்டுவீச்சில் ஈராக்கில் இருவர் உயிரிழப்பு!


ஈராக்கில் துருக்கிய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் இருவர் பலி ஆகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கிய விமானம், டுஹோக் பகுதியில் குண்டு வீச்சு நிகழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் மூலிகை பறிக்க சென்றவர்கள் இந்த தாக்குதலில் பலியாகினர்.
துருக்கிய படைகள் அவ்வவ்போது வடக்கு ஈராக்கில் எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
குர்தீஸ் தொழிலாளர்கள் கட்சி (பிகேகே) கிளர்ச்சி படைக்கு எதிராக அவர்களின் இயங்குதளத்தைக் குறிவைத்து இந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
துருக்கிய அரசுக்கு எதிராக 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிற இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...