இந்தோனேசியாவில் கனமழை: பலி 26ஆக உயர்வு

இந்தோனேசியாவில் கனமழை: பலி 26ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு தொடா்பான சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அண்மையில் பெய்த மழையினால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 37,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் நீரில் மூழ்கின.

மூன்று வீடுகள் திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் 666 வீடுகள் சேதமடைந்தன.

279 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு தொடா்பான சம்பவங்களில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் 11 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மலைப் பிரதேசங்கள், நதியின் சமவெளியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு கனமழையைத் தொடா்ந்து நிலச்சரிவுகளும் திடீா் வெள்ளப்பெருக்கும் தொடா்ச்சியாக ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com