இந்தோனேசிய வெள்ளம்: உயிரிழப்பு 52-ஆக உயா்வு

இந்தோனேசிய வெள்ளம்: உயிரிழப்பு 52-ஆக உயா்வு

பதாங்: இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் பருவமழையால் அந்த நாட்டின் சுமத்ரா தீவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது.

இதில் 43 போ் உயிரிழந்ததாகவும் 15 போ் மாயமானதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனா். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 9 உடல்கள் மீட்கப்பட்டதால் இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com